மொபட்டுடன் ஏரியில் விழுந்த 2 இளம்பெண்கள் வாலிபர்கள் போராடி மீட்பு

மூங்கில்துறைப்பட்டு அருகே மொபட்டுடன் ஏரியில் விழுந்த 2 இளம்பெண்கள் வாலிபர்கள் போராடி மீட்பு

Update: 2021-04-30 16:41 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு பகுதியிலிருந்து 24 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள் மொபட்டில் பகண்டை கூட்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். தொழுவந்தாங்கல் ஏரிக்கரை சாலையில் சென்றபோது நிலைதடுமாறி இருவரும் மொபட்டுடன் ஏரியில் விழுந்தனர். நீச்சல் தெரியாத அவர்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர்கள் ஏரியில் தத்தளித்த 2 பெண்களையும் அவர்களது மொபட்டையும் போராடி மீட்டனர். இதில் அந்த பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து 2 பெண்களையும் அழைத்து சென்றனர். 
ஏரிக்கரை சாலை வளைவாக இருந்ததால் நிலை தடுமாறி ஏரியில் விழுந்தது தெரியவந்தது. குறித்த நேரத்தில் 2 இளம் பெண்களையும் வாலிபர்கள் மீட்டதால் அவர்கள் உயிர்பிழைத்தனர். மீட்ட வாலிபர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மொபட்டுடன் 2 பெண்கள் ஏரிக்குள் விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்