இறைச்சிக்கடைகளில் விற்பனை மந்தம்

இறைச்சிக்கடைகளில் விற்பனை மந்தம்

Update: 2021-04-30 16:09 GMT
கோவை


சனி, ஞாயிற்றுக்கிழமை களில் இறைச்சிக் கடை களை மூட உத்தரவிட்டு உள்ளதால் கோவையில் இறைச்சி விற்பனை மந்தமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் சனிக்கிழ மையே இறைச்சிக் கடைகளில் சமுக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டு தங்களுக்கு தேவையான இறைச்சி, மீன் ஆகியவற்றை வாங்கி னர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

எனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தர விட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) இறைச்சி கடைகள் மூடப்படுகிறது. 

ஆர்வம் இல்லை

இதனால் ஞாயிற்றுக்கிழமை சாப்பிட தேவையான இறைச்சி மற்றும் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் அதிகம் வருபவர்கள் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.

இதற்காக கோவையில் மீன், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்ட வில்லை. இதனால் மீன் விற்பனை மந்தமாக இருந்தது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதனால் பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. மேலும் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கும் மக்கள் குறைவாகவே வந்தனர். இதனால் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் விற்பனை பாதிக்கப்பட்டது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்