பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் தீவிரம்

திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-04-30 15:59 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. 

இதனால் மாவட்டம் முழுவதும் 1,600-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதில் 270 பேர் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதோடு கொரோனா வேகமாக பரவும் பகுதிகளில் திண்டுக்கல்லும் ஒன்றாக உள்ளது. 

இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கொரோனா வேகமாக பரவுகிறது. 

எனவே, அதுபோன்ற பகுதிகளை கண்டறிந்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

அந்த பகுதிகளில் வசிப்போருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படுகிறது. 

மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கும் பணியை தீவிரப்படுத்தும்படி கமி‌‌ஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.


அதன்படி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 

அந்த வகையில் திண்டுக்கல் திருமலைசாமிபுரம், இந்திராநகர் பகுதிகளில் நேற்று கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. 

இதில் சுகாதார ஆய்வாளர் சுரே‌‌ஷ்குமார் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்