திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி பெண் பலியானார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி பெண் பலியானார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி பெண் பலியானார்.
423 பேருக்கு கொரோனா
கொரோனா தொற்று நாடு முழுவதும் மீண்டும் விஷ்வரூபம் எடுத்துள்ளது. அந்த அளவிற்கு பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெண் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 409-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 268 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 138-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 3 ஆயிரத்து 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 38 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 239-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.