விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்தியா விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.
செயலாளர் சிக்கணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வரி செலுத்தும் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.7,500 வழங்கவேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கவேண்டும்.
55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கவேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து தடுப்பூசி போடவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன், நகர செயலாளர் கிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.