ஆறுமுகநேரி அருகே பெண் மீது தாக்குதல்

ஆறுமுகநேரி அருக பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2021-04-30 12:21 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் மகள் நிக்சன் (வயது 36).  அதே பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் மனைவி ஜெரினா(39). இவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவர். வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். நிக்ஸனின் தாயார் லீலாவதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது இளைய மகன் நார்திஸ் படத்திற்கு மாலை அனிவிப்பதற்காக தனது கணவர் ராஜியின் வீட்டிற்கு, அதாவது ஜெரினா குடியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெரினா அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று தகராறு செய்துள்ளார். ஆனால் அதை கேட்காத லீலாவதி தனது மகனுடைய படத்திற்கு மாலை போடுவதற்கு வீட்டுக்குள் சென்று உள்ளார். ஆத்திரமடைந்த ஜெரினா,  லீலாவதி முகத்தில் கத்தியால் அடித்து காயப்படுத்தியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த லீலாவதி ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக  ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்