கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பழைய கழிவு பொருட்கள் குடோனில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை குடோனில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-04-30 04:46 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ளது புதுப்பேட்டை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி பழைய கழிவு பொருட்களுக்கான குடோன் உள்ளது. இந்த குடோனில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பழைய கழிவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் யாரோ சிலர் தீ வைத்து சில பொருட்களை எரித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்