ஏற்காடு அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி வெடித்து காயம்
ஏற்காடு அருகே, முயல் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி வெடித்ததில் காயம் அடைந்தார்.
ஏற்காடு:
ஏற்காடு அருகே, முயல் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி வெடித்ததில் காயம் அடைந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முயல் வேட்டை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 28).
இவர் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் முயல் வேட்டைக்காக சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அரசு உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கியை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
படுகாயம்
முயல் வேட்டையின்போது அவர் தடுமாறி கீழே விழுந்ததில் துப்பாக்கி வெடித்தது. இதில், இளங்கோவின் இடது பக்க வயிற்று பகுதியில் குண்டு பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுபற்றி பாப்பிரெட்டிப்பட்டி வனத்துறையினர் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.