தென்காசி மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-29 20:34 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரி, நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 2 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,519 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 174 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்