பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

ஆழ்வார்குறிச்சியில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-04-29 20:14 GMT
கடையம், ஏப்:
ஆழ்வார்குறிச்சியில் தி.மு.க. சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். பூங்கோதை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தர்பூசணி, முககவசம் வழங்கப்பட்டது. கடையம் ஒன்றிய செயலாளர் குமார், ஆழ்வார்குறிச்சி நகர செயலாளர் பொன்ஸ், மாவட்ட மகளிரணி செல்வி சங்கு கிருஷ்ணன், முன்னாள் விவசாய சங்க நிர்வாகி சங்குகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* குருவிகுளம் அரசு ஆஸ்பத்திரியின் சித்த மருத்துவ பிரிவு சார்பில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதேவர்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குருவிகுளம் வட்டார மருத்துவர் கார்த்திக்குமார், சித்த மருத்துவர் செல்வராணி, சுகாதார ஆய்வாளர் குருமூர்த்தி, மருத்துவ பணியாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்