பாவூர்சத்திரம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

பாவூர்சத்திரம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2021-04-29 20:10 GMT
பாவூர்சத்திரம், ஏப்:
மாவட்ட உதவி திட்ட அலுவலரும், மண்டல அலுவலருமான சங்கரநாராயணன் தலைமையில் கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாந்தி, சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாவூர்சத்திரம் பஸ் நிலையம், மற்றும் மெயின்ரோடு பகுதிகளில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், பழக்கடைகள், மளிகை கடைகள், செல்போன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதில் சமூக இடைவெளியை பின்பற்றாத 3 கடைகளுக்கு தலா ரூ.500-ம், முககவசம் அணியாதது உள்ளிட்டவைக்காக 14 பேருக்கு தலா ரூ.200-ம் என ெமாத்தம் ரூ.4 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்