நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு - 395 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 395 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 385 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 395 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-420, ஐதராபாத்-365, விஜயவாடா-389, மைசூரு-422, மும்பை-425, பெங்களூரு-420, கொல்கத்தா-440, டெல்லி-376.
முட்டைக்கோழி கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.65 ஆக அதிகரித்து உள்ளது.
முட்டை கொள்முதல் விலை மிகவும் குறைந்ததால் அதன் விற்பனை சற்று அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் பிற மண்டலங்களிலும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரங்களாக முட்டை கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்து உள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் ஆறுதல் அடைந்து உள்ளனர்.