புதிதாக 403 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 403 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-29 18:53 GMT
திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 403 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 22,922 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 2,792 பேர் உள்ளனர். 455 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்