வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதி யில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வயதான பெண் குட்டியானை இறந்து கிடந்தது.
இது குறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி ஜெயச்சந்திரன், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியருக்கு தகவல் தெரிவித்தார்.
இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அந்தப்பகுதி வனவிலங்குகள் நடமாடடம் அதிகம் உள்ளது என்பதால் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை.
எனவே வெள்ளிக் கிழமை பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.