பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு, வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு இணைந்து மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் கலியாவூர் பகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வட்டார ஊராட்சி மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கலியாவூர் கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார், சித்த மருத்துவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஏற்பாடுகளை பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் சுகன்கிறிஸ்டோபர், கலியாவூர் ஊராட்சி துணை தலைவர் பரமசிவம், அழகு மணிகண்டன், தங்கராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீ்ர் மற்றும் முககவசம் வழங்கினார். இதில் வணிகர் சங்க நிர்வாகிகள் செல்வன், சதீஷ், பட்டிமன்ற பேச்சாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செல்லபாண்டியன் நகர் காந்தாரியம்மன் கோவில் அருகில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்க நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் வழங்கப்பட்டது. பார்வர்டு பிளாக் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். கருப்பசாமி, காமராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அரசு மாவட்ட மருத்துவமனை யோகா ஆயுர்வேத மருத்துவர் திருமுருகன் பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசி, கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கினார்.