வேலூர் மாவட்டத்தில் 442 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் 442 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுஇடங்களில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 497 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 442 பேருக்கு தொற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். 442 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 169 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 ஆயிரத்து 346 பேர் குணமடைந்துள்ளனர். 382 பேர் உயிரிழந்துள்ளனர். 2,441 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.