அந்தியூர் வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

அந்தியூர் வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

Update: 2021-04-29 00:48 GMT
அந்தியூர் வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பல்வேறு அரசு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வருவாய் துறை ஆய்வாளர் உமா, அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வழங்கினர்.
மேலும் அந்தியூர் வாரச்சந்தை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது

மேலும் செய்திகள்