திருச்செங்கோடு அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் சரக்கு ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

திருச்செங்கோடு அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சரக்கு ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Update: 2021-04-28 21:14 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருக பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சரக்கு ஆட்டோ  டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 21),  சரக்குஆட்டோ டிரைவர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி அந்த மாணவியை அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் அந்த மாணவியிடம், நான் உன்னை காதலிக்கிறேன், நிச்சயம் உன்னை திருமணம் செய்து ெகாள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 
விசாரணை
பின்னர் இதுகுறித்து அந்த மாணவி தனது ெபற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவரான சத்தியமூர்த்தியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்