தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-04-28 19:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 196பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1078பேர் கொரோனாபாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 208 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 196பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 1066 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்