போலீசார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை
போலீசார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை
கோத்தகிரி
கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில் ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. இது கைகாரு சீமைக்கு உட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்களுக்கு சொந்தமானது. இங்கு திருவிழா நடத்துவது மற்றும் பூசாரிகளை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று பெட்டட்டி சுங்கம் மைதானத்தில் போலீசார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர் தலைமை தாங்கினார். குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இரு தரப்பை சேர்ந்த 30 பேர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஹெத்தையம்மன் கோவில் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது எனவும், கைகாரு சீமைக்கு உட்பட்டு பழைய நிலைக்கு திரும்பவும் முடிவு செய்தனர்.