சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம்

சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம் ஆனது.

Update: 2021-04-28 18:11 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது கால்நடைகளுக்கு உணவிற்காக சோளத்தட்டைகளை தனது வீட்டின் அருகே சேமித்து வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று திடீரென இந்த சோளத்தட்டைகளில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் பலனில்லை. இது குறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சோளத்தட்டைகளில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் சோளத்தட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சோளத்தட்டைகளில் எப்படி தீப்பிடித்தது? என குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்