விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
போடியில் விவசாயி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
போடி:
போடி பரமசிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி.
இவருடைய வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது.
இதை பார்த்த தர்மராஜ் உடனே போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர் சுமார் அரை மணி நேரம் போராடி, சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் அந்த பாம்பை போடி அருகேயுள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.