கோவையில் 963 பேருக்கு கொரோனா உறுதி

கோவையில் 963 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-28 17:02 GMT
கோவை

கோவையில் நேற்று 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்து உள்ளனர்.

அதிகரிக்கும் தொற்று

கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதார துறை வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் நேற்று 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 259 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 33 வயது ஆண், 62 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தொற்றுக்கு இதுவரை 719 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 991 பேர் நேற்று குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 68 ஆயிரத்து 619 பேர் குணமடைந்தனர். தற்போது 6 ஆயிரத்து 921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அபராதம் விதிப்பு

கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் நேற்ற 888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் வடக்கு மண்டலத்தில் 196 பேருக்கும், தெற்கு மண்டலத்தில் 124 பேருக்கும், கிழக்கு மண்டலத்தில் 222 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 194 பேருக்கும், மத்திய மண்டலத்தில் 91 பேருக்கும், இவர்கள் தவிர இடம் அடையாளம் காணமுடியாத 61 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

 இதுவரை மாநகராட்சி பகுதியில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்