கொரோனாவுக்கு பெட்டிக்கடைக்காரர் சாவு

கொரோனாவுக்கு பெட்டிக்கடைக்காரர் பலியானார்.

Update: 2021-04-27 22:42 GMT
களக்காடு, ஏப்:
களக்காடு கோவில்பத்து மேலகட்டளைத் தெருவை சேர்ந்த 59 வயது நபர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் கோவில்பத்தில் கிருமி நாசினி தெளித்து, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். களக்காடு பகுதியில் நேற்று 17 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகள்