பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது

கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

Update: 2021-04-27 20:47 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

ஓட்டுப்பதிவு

கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27-ந் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. அந்த நகராட்சிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இதனால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்லாரி மாநகரட்சியில் 39 வார்டுகள், ராமநகர், சன்னபட்டணா நகராட்சிகளில் தலா 31 வார்டுகள், விஜயபுரா, பேலூர் புரசபைகளில் தலா 23 வார்டுகள், பத்ராவதி நகராட்சியில் 35 வார்டுகள், மடிகேரி நகராட்சியில் 23 வார்டுகள், குடிபண்டே பட்டண பஞ்சாயத்தில் 11 வார்டுகள், தீர்த்தஹள்ளி பட்டண பஞ்சாயத்தில் 15 வார்டுகள், பீதர் நகராட்சியில் 35 வார்டுகளில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 

மேலும் இரேகூர், ஹள்ளிகேட பட்டண பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள தலா ஒரு வார்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

கொரோனா நோயாளிகள்

கொரோனா பரவல் காரணமாக வைரஸ் தடுப்பு விதிமுறைகள் வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்பட்டன. வாக்காளர்களுக்கு சானிடைசர் திரவம் வழங்கப்பட்டது. அனைத்து வாக்காளர்களும் முகக்கசம் அணிந்திருந்தனர். வரிசையில் நின்ற வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றினர். வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றினர். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள், வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நகர உள்ளாட்ச தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்