அரசு ஊழியர்கள் 14,868 பேர் தபால் ஓட்டு போட்டனர்
அரசு ஊழியர்கள் 14,868 பேர் தபால் ஓட்டு போட்டனர்
கோவை
கோவை மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 29 தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் 14,868 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,699 பேரும், சூலூர் தொகுதியில் 1,475 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 2,319 பேரும், கோவை வடக்கு தொகுதியில் 1,537 பேரும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,278 பேரும் தபால் ஓட்டு செலுத்தி உள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில் 1,556 பேரும், சிங்காநல்லூர் தொகுதியில் 1,832 பேரும், கிணத்துக்கடவு தொகுதியில் 1,362 பேரும், பொள்ளாச்சி தொகுதியில் 1,133 பேரும், வால்பாறை தொகுதியில் 677 பேரும் தபால் ஓட்டு போட்டு உள்ளனர்.
210 ராணுவ வீரர்களிடம் இருந்து தபால் ஓட்டுக்கள் வரப்பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 2-ந் தேதி அன்று காலை 8 மணி வரை பெறப்படும் தபால் ஓட்டுக்கள் மட்டுமே வாக்கு எண்ணிக் கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே தபால் வாக்கை பதிவு செய்து அனுப்பாத அரசு ஊழியர்கள் உடன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தபால் வாக்குகளை அனுப்ப கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.