கடையில் வயர் திருடிய 2 பேர் கைது
ஏழாயிரம் பண்ணையில் கடையில் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை மெயின் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் முனீஸ்வரன். இவரது கடையில் சாத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கணேஷ் பிரபு (வயது 33) என்பவர் பொருட்கள் வாங்குவது போல வந்தார்.
அப்போது அவர் பொருட்களின் பெயர்களை சொல்லி விலை கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது கணேஷ்பிரபு மற்றும் அவருடன் வந்த சாத்தூர் ராஜகோபால் மண்டபம் தெருவை சேர்ந்த ராகவேந்திரா (19) ஆகிய 2 பேரும் கடையில் இருந்து வயர்களை தூக்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வயர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் முனீஸ்வரனின் கடையில் இருந்து வயர்களை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ்பிரபு, ராகவேந்திரா ஆகிய 2 பேரையும் போலீசார் ைகது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள வயர்களை பறிமுதல் செய்தனர்.