சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

Update: 2021-04-27 18:48 GMT
சமயபுரம், 
அம்மன் கோவில்களில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 20-ந்தேதி நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக தேருக்கு பதிலாக அம்மன் சிறிய அளவிலான சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தார். அதைத்தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற்றது. தேர்த்திருவிழா முடிந்து எட்டாம் நாளான நேற்று அம்மன் தங்ககமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்