மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

Update: 2021-04-27 18:19 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் பழையனூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது முதுவந்திடல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லிங்கசாமி (வயது40). இவர் நேற்று மாலை தனது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் மின்னல் தாக்கியுள்ளது.இதில் விவசாயி லிங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழையனூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்