வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் ரத்து

கொரோனா பரவல் காரணமாக வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேரில் எழுந்தருளிய ராமர் கோவிலுக்கு திரும்பினார்.

Update: 2021-04-27 17:56 GMT
வடுவூர்;
கொரோனா பரவல் காரணமாக வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேரில் எழுந்தருளிய ராமர் கோவிலுக்கு திரும்பினார். 
கோதண்டராமர் கோவில் 
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வந்தது.
 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான தேர் கட்டுமான பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 
தேரோட்டம் ரத்து
இந்தநிலையில் தேரோட்டத்துக்கு தேர் தயார் செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்களை அனுமதிக்காமல் பொக்லின் எந்திரங்களை கொண்டு தேரை  இழுத்து தேரோட்டத்தை நடத்த தீட்சிதர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால்   வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணருடன்  வில்லேந்திய திருக்கோலத்தில் புறப்பட்ட கோதண்டராமர் தேரில் எழுந்தருளி பின்னர் கோவிலுக்கு திரும்பினார். தேர் வடம் பிடித்து இழுக்கப்படவில்லை. பின்னர் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்