ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சடிபிரம்பு பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் மகள் ரேணுகா (வயது23). தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் மனம் உடைந்து காணப்பட்ட அவர் விஷம் அருந்தினார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.