கோவில்பட்டியில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டியில் சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தான்.

Update: 2021-04-27 16:20 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் காதல் தகராறில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் விவகாரம்
கோவில்பட்டி கடலையூர் ரோடு சண்முகா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அவர் நண்பருடன் நின்று கொண்டிருந்தாராம். 
அப்போது கருணாநிதி நகர் 3- வது தெருவைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மகன் மதன்குமார் (வயது 21) அங்கு வந்தார். எதற்காக அடிக்கடி எங்கள் பகுதிக்கு வருகிறாய்? என சிறுவன் மதன்குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. 
அப்போது, நான் தங்கள் தெருவில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றும், நான் அடிக்கடி இங்கு வருவேன். நீ என்னை ஏன் வருகிறாய் என எப்படி கேட்கலாம்? என தகராறு செய்தாராம். அங்கிருந்து மதன்குமார் சென்று விட்டாராம்.
அரிவாள் வெட்டு
 இதையடுத்து அந்த சிறுவனும், அவரது நண்பரும் பெருமாள் தெரு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்களாம். 
அப்போது அங்கு வந்த மதன்குமார் மற்றும் அவரது நண்பர்களான கருப்பசாமி மகன் மணி என்ற போண்டா மணி (வயது 19), ராமசாமி மகன் கார்த்திக் (வயது 21), 17 வயது சிறுவன் மற்றும் இருவர், 16 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பரை அரிவாள் மற்றும்் கையால் தாக்கினார்களாம். இதில் 16 வயது சிறுவனுக்கு இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் மதன்குமர் உள்பட அவரது நண்பர்கள் தப்பி ஓடவிட்டார்களாம். இதில் பலத்த காயமடைந்த 16 வயது சிறுவன் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
4 பேர் கைது
இதுகுறித்து, சிறுவன் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுவனை தாக்கிய மதன்குமார், கார்த்திக், மணி உள்பட  4 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப் இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் ஆகியோர் கைது செய்தனர். 
வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்