காவேரிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

காவேரிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

Update: 2021-04-27 15:51 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் திருப்பாற்கடல் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன்மேனாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி துணை மின் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம்தாக்கி படுகாயமடைந்தார். 

அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்