கொரோனா பரவல் எதிரொலி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல்

கொரோனா பரவல் எதிரொலியால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.

Update: 2021-04-27 15:20 GMT

ஆண்டிப்பட்டி:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தினமும் 1,500 முதல் 2 ஆயிரம் பேர் வரை வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவல் எதிரொலியால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் அதிகளவில் வந்து கூடுவதை தடுக்கும் வகையில், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வரவேண்டாம் என்றும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களில் சிகிச்சை பெற்று கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவசர சிகிச்சைகளுக்காக எப்போதும் போல தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரலாம். புறநோயாளிகள் பிரிவு செயல்படாத காரணத்தால் அது வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

மேலும் செய்திகள்