பொக்லைன் எந்திரத்தை இயக்கிய 3 பேர் கைது

கொடைக்கானல் மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-04-27 14:38 GMT
பெரும்பாறை:

கொடைக்கானல் மலைப்பகுதியில், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்த வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

 இந்தநிலையில் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தை இயக்குவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் தாசில்தார் சந்திரன், தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சேதுமணி ஆகியோர் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதனையடுத்து அனுமதி இன்றி இயக்கப்பட்ட பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் நில உரிமையாளர் சியாம்குமார், பொக்லைன் எந்திர டிரைவர் பாஸ்கரன் மற்றும் காமேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு அபராதம் விதிக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்