கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன.

Update: 2021-04-27 01:06 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்தபடி நேற்று ஈரோட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அரசின் அறிவிப்பு தெரியாத சிலர் நேற்று திரையரங்களுக்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா தொற்று பரவல் தீர்ந்து அரசின் மறு அறிவிப்பு வரும்வரை தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படாது என்று தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்