ஆப்பக்கூடல் பகுதியில் தந்தை-மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா

ஆப்பக்கூடல் பகுதியில் தந்தை- மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-04-27 00:19 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் 68 வயது முதியவர். இவருக்கும், அவருடைய 32 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் முனியப்பன்பாளையம் பகுதியில் 35 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

மேலும் ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையம் பகுதியில் 54 வயதுடைய ஆண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரி லோகநாதன் தலைமையில் கிருமிநாசினி அடித்து பிளீச்சிங் பவுடர் போடப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கொரோனா பரிசோதனை எடுத்தனர்.

மேலும் செய்திகள்