கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத ஓட்டலுக்கு சீல் வைப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகளில் வாடிக்கையாளர்களை அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது, பார்சல் மட்டுமே வினியோகிக்க வேண்டும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்தார். அப்போது அந்த ஓட்டலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், ஓட்டலுக்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.