குழந்தையின் மூளையில் கட்டி

குழந்தையின் மூளையில் கட்டி

Update: 2021-04-26 20:04 GMT
குழந்தையின் மூளையில் கட்டி
கோவை

கோவையை அடுத்த பேரூர் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பக இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பிறந்து 4 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அந்த குழந்தையை கடந்த 20-ந் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.

மேலும் அந்த குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் மூளையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குழந்தைக்கு டாக்டர்கள்அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர். 

 இதனை தொடர்ந்து அந்த குழந்தை நன்கு உடல் நலம் தேறியது. இதையடுத்து அந்த குழந்தை மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த குழந்தையை டீன் நிர்மலா காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். 

அப்போது உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் மணிகண்டன், மதுவந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்