ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-26 19:58 GMT
கடையம், ஏப்:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தில் இருந்து ஒருவர் தனது மோட்டார்சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்துள்ளார். போலீசார் விசாரணையில், அவர் கடையம் அருகே உள்ள நரையப்பபுரத்தை சேர்ந்த குமரேசன் மகன் கணேசன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்