சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Update: 2021-04-26 19:58 GMT
ஊழியர் பலி
துடியலூர்

கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். 

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்