மது விற்ற 3 பேர் கைது
சிவகாசி பகுதியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் போலீசார் அண்ணாசிலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக முனீஸ்வரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மாரனேரி போலீசார் இ.டி.ரெட்டியாபட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடு பட்ட போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பூவாவூரணியை சேர்ந்த அழகர்சாமி (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் எம்.புதுப்பட்டி போலீசார் குமிழங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது எரிச்சத்தம் பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி (25) என்பவரை போலீசார் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற வழக்கில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.