பாம்பு கடித்து மூதாட்டி பலி
பாம்பு கடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தை அடுத்துள்ள தொருவளுர் அருகே உள்ளது கவரங்குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமாயி (வயது60). கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். ராமாயி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ராமாயி வீட்டில் இருந்தபோது அவரின் காலில் பாம்பு கடித்துள்ளது. இதனால் கத்தி கூச்சலிட்ட ராமாயியை அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.