சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே பிள்ளபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல் தளவாப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு மா, பலா, கொய்யா மற்றும் பல்வேறு கனிகள், ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
ெநாய்யல் சேமங்கி மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.