தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க கூடாது. வேலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க கூடாது

Update: 2021-04-26 17:30 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களையும், காய்ச்சல், சளி, தும்மல், இருமல் மற்றும் மூச்சு பிரச்சினை, இருதய கோளாறு, சர்க்கரை நோய் மற்றும் நுரையீரல் வியாதி உள்ளவர்களையும் அனுமதிக்க கூடாது. அனைவரையும் சிறு குழுக்களாக பிரித்து பணி வழங்க வேண்டும். வேலை நடைபெறும் இடத்துக்கு ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் பயனாளிகள் கூட்டமாக செல்ல கூடாது.

 பணியின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பணிதளத்தில் புகையிலை, வெற்றிலை உபயோகித்தல் மற்றும் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது. உணவு, சிற்றுண்டி மற்றும் குடிநீர் பங்கிட்டு உண்ணுதல் தடை செய்யப்படுகிறது.

 பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அந்த தொகுப்பில் பணியினை நிறுத்த வேண்டும். பயனாளிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இந்த தகவலை வேலூர் மாவட்ட கெலக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்