சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் கைது
திருப்பூர்
திருப்பூர் எம்.எஸ். நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் திருப்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுமியை இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமிக்கு காயம் ஏற்பட்டு தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.