காவேரிப்பாக்கம் அருகே தாலிக்கட்டும் நேரத்தில் மணப்பெண் மாயம்

காவேரிப்பாக்கம் அருகே தாலிக்கட்டும் நேரத்தில் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-04-26 15:56 GMT
காவேரிப்பாக்கம்

திருமண வரவேற்பு

காவேரிப்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெமிலி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் காவேரிபுரம் பகுதியை சேர்ந்த நர்சிங் படித்த 20 வயது பெண்னுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

25-ந் தேதி திருமணம் செய்ய பெரியோர்களால் தேதி குறிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 25-ந் இவர்களுடைய திருமணம் நடக்க இருந்தது. இதற்காக 24-ந் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுது. இதில் இருவீட்டாரின் உறவினர்களும் கலந்துகொண்டனர். 

மணப்பெண் மாயம்

அடுத்தநாள் காலையில் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்கு தயாரானார்கள். இந்த நிலையில் மணப் பெண்ணை காணவில்லை. அவர் திடீரென மாயமாகிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரு தரப்பினரும் பல்வேறு இடங்களில் தேடியும் மணப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மணமகனின் உறவினர்கள் அதிர்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மணப்பெண்ணின் தந்தை நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்