பழங்கரையில் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்
பழங்கரையில் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்
அவினாசி
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி ராஜன் நகர் கமிட்டியார் காலனியில் பழமை வாய்ந்த விநாயகர், கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பன், வேடன், பேச்சியம்மன், மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி் ஆகிய தெய்வங்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என விழா கமிட்டியினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்றுகாலை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து திரளான பெண் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். 25-ந்தேதி முதற்கால யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தன. அன்று இரவு 9 மணிக்கு விநாயகர், கருப்பராயன், கன்னிமார், மகாவிஷ்ணு ஆகியவற்றின் கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தல் நடந்து. நேற்றுகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2-ம்கால யாக பூஜை ஆகியன நடந்தது. 6.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு 7 மணிக்கு அபிஷேகமும் நடந்தது.காலை 7 மணிக்கு விமான அபிஷேகம் 7.20 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், கோமாதா பூஜை, தரிசனம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.