போடி:
போடி திருமலாபுரம் ஒழுகால் பாதை அருகே வசித்து வரும் பரமசிவம் மகன் நாகராஜ்(வயது 21). மீன் விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கடந்த சில மாதங்களாக பேசி பழகி வந்தார். இந்நிலையில் ஆசைவார்த்தைகள் கூறி அந்த மாணவியை நாகராஜ் கடத்தி சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து மாணவியை காணவில்லை என்று போடி நகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று நாகராஜை கைது செய்தார். மேலும் மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.