எடப்பாடியில் உப்பு பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி விபத்தில் சிக்கியது
எடப்பாடியில் உப்பு பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி விபத்தில் சிக்கியது.
எடப்பாடி,
தூத்துக்குடியில் இருந்து ஐதராபாத்திற்கு உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று சென்றது. இந்த லாரி எடப்பாடி அங்காளம்மன் கோவில் வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டாரஸ் லாரியின் சக்கரம் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் இறங்கியது. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள வீட்டின் மீது மோதி நின்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீட்பு வாகனம் மூலம் அந்த டாரஸ் லாரி சாக்கடை பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதனை காண ஏராளமானோர் அங்கு திரண்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.